ஈரோடு: சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 26) காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மித வேகத்தில் சென்றன.