ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களிலும் வந்த மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர், அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்தபோது, அப்பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில், விபத்தில் சிக்கிய இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி சாலையில் இழுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில், முன்னால் செல்லும் ஒருவர் இருசக்கர வாகனத்தை வலது புறம் திருப்ப முயற்சி செய்கிறார்.