தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ! - moderate rain

ஈரோடு: சத்தியமங்கலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதோடு, மாணவர்கள் நனைத்தபடி பள்ளிக்குச் சென்றனர்.

rain
rain

By

Published : Dec 2, 2019, 10:29 AM IST

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலத்தில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்தும் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்துபடி பள்ளிக்குச் சென்றனர். மழை காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டதால் சத்தி தினசரி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் வரவில்லை. விடிய விடிய பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Rain at Erode Sathyamangalam

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details