ஈரோடு:நம்பியூர் வட்டம், குருமந்தூர் மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி குழந்தைவேல். இவரின் மனைவி கவிதா; இவருக்கு சந்தோஷ் என்ற மகனும், தக்சன்யா என்ற மகளும் உள்ளனர். தக்சன்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கரோனோத் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்ததுள்ளார்.
பள்ளிகள் திறந்த நிலையில் தக்சன்யா, கரோனோ காலத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக வாங்கிய செல்போனில் கேம் விளையாடியே வந்துள்ளார். இதனால் தக்சன்யாவை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. மனம் உடைந்த தக்சன்யா தனது அறைக்கு சென்று தனியாக இருந்துள்ளார்.