ஈரோடு: சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் ரவி என்பவரின் மகன் ஹரிசங்கர். இவர் காங்கேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். விடுமுறை தினங்களில் ஹரிசங்கர்லேத் பட்டறைக்கு பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவ. 6) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கம் போல் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வேலைக்காக ஹரிசங்கரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் பிற்பகலில் பணியின் போது மின்சாரம் தாக்கி ஹரிசங்கர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றொருக்கும் போலீசாருக்கும் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். ஹரிசங்கர் உயிரிழப்புக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது எனக் கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவகிரி காவல் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஹரிசங்கரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.