தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உரிய சம்பளம் கொடுங்க' - போராட்டத்தில் குதித்த ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் - erode Contract workers struggle

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குப்பைகளை சேகரிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு தொழிலாளிக்கு உரிய சம்பளம் வழங்கக் கோரி போராட்டம்
துப்புரவு தொழிலாளிக்கு உரிய சம்பளம் வழங்கக் கோரி போராட்டம்

By

Published : Dec 6, 2019, 5:06 PM IST

சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டில் உள்ள குப்பைகளைச் சேகரிக்கும் வகையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 90 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கு தினம்தோறும் கூலியாக ரூபாய் 490 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வாரந்தோறும் வழங்கப்படும் சம்பளம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது.

தினந்தோறும் 490 என்பதற்குப் பதிலாக வைப்பு நிதியாக ரூபாய் 50, தினக்கூலியாக ரூபாய் 230 அவர்களுக்கு வழங்கப்பட்டது. வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய் 50 குறித்து, எந்த ஒரு ரசீதும் வழங்கப்படவில்லை.

ரூபாய் 490 இணைக்கப்பட்ட நிலையில் சம்பளத்தைக் குறைத்து தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சத்தியமங்கலம் நகராட்சி முன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவுத் தொழிலாளிக்கு உரிய சம்பளம் வழங்கக் கோரி போராட்டம்

பின்னர் நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: மழைநீரை அகற்றக்கோரி சட்டமன்ற உறுப்பினர் போராட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details