தமிழ்நாடு அரசு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்த அனுமதிக்காத நிலையில் சிலர் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி. நம்பர் பிளேட் தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சிலர் மத்திய அரசு தங்களுக்குத்தான் இந்த அனுமதி வழங்கியுள்ளதாக கூறி நம்பர் பிளேட்டுகளை தயாரித்து இருசக்கர வாகன விற்பனையாளர்களிடம் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.
சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட் விற்பனை - tamilnadu
ஈரோடு: சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச்சங்கத்தினர் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இதனை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச் சங்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதில், 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசு கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.