ஈரோடு:திருநகர் காலனியைச் சேர்ந்த தம்பி - வள்ளி தம்பதியினரின் இரண்டு மகன்கள் வெற்றிவேல் மற்றும் சக்திவேல். இருவரும் ஈரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8 மற்றும் 7ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இவர்களின் தாய் வள்ளி உயிரிழந்த நிலையில், இருவரும் காப்பகத்தில் தங்கி பள்ளிக்குச்சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஆதார் எண் பெறுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆதார் மையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இருவருக்கும் ஆதார் எண் கிடைக்கவில்லை. தொழில் நுட்பக் கோளாறால் ஆதார் பதிவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆதார் மையத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் பல முறை மாணவர்களின் பெரியம்மா, சுதா ஆதார் பதிவிற்காகச்சென்றுள்ளார். இதற்காக ஒவ்வொரு முறையும் 1500 ரூபாய் வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. எனினும் இருவருக்கும் ஆதார் எண் கிடைக்கவில்லை. இந்நிலையில், பள்ளியில் இருந்தும், விடுதியில் இருந்தும் ஆதார் எண்ணுடன் வருமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.