தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப்; மதுரை அணி சாம்பியன்! - junior

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு ரோல்பால் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 7ஆவது ஜுனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

state level roll ball championship

By

Published : Aug 12, 2019, 8:49 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஈரோடு ரோல்பால் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 7ஆவது ஜுனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர்களுக்கான ஜுனியர் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் பிரிவில் லீக் போட்டிகள் என்ற அடிப்படையிலும், பெண்கள் பிரிவில் நாக்அவுட் சுற்று முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் திருச்சி, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, கோவை உட்பட 14 மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப்

இதில் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் மதுரை மற்றும் சிவகங்கை அணிகள் மோதின. இதில் 14-04 என்ற புள்ளிக் கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. அதேபோல் பெண்கள் பிரிவில் மதுரை அணி முதலிடமும், கோவை அணி இரண்டாம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் பதக்கங்கள் மற்றும் கோப்பையை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details