ஈரோடு மாவட்டம் வஊசி மைதானத்தில் மாநில அளவிலான வில் அம்புப் போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
மாநில அளவிலான வில் அம்புப் போட்டி! வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் - மாநிலஅளவிளான
ஈரோடு: மாநில அளவிலான வில் அம்புப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இப்போட்டியானது, 8, 10, 12, 14, 17 ஆகிய வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், 17 வயதுக்கு மேல் உள்ள சீனியர் பிரிவின் கீழும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வயது பிரிவிலும் உள்ளவர்களுக்கு மூன்று அம்புகள் என்கிற விதத்தில் 12 முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டு, 10 மீட்டர் முதல் 50 மீட்டர் நீளம் வரை வில் அம்புகள் விடப்பட்டன.
இப்போட்டியில், அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வயது பிரிவிலும் சிறப்பான முறையில் வில் அம்புகளை விட்டு புள்ளிகளை அதிகளவு பெற்ற வீராங்கனைகளை ஆட்ட நாயகியாக தேர்வு செய்து சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. சிறப்பான முறையில் வீர வீராங்கனைகள் வில் அம்பு விட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.