ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 1996ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜி.பி. வெங்கிடு கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி, வெங்கிடுவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்த நிலையில், இன்று மு.க. ஸ்டாலின் வெங்கிடுவின் இல்லத்தில் வைத்து அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.