தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ சட்டத்தில் இலங்கை முகாமைச் சேர்ந்தவர் கைது! - இலங்கை முகாமை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு: வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தியதாக இலங்கை முகாமைச் சேர்ந்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Srilanka refugee camp person arrested under pocso
போக்சோ சட்டத்தில் இலங்கை முகாமை சேர்ந்தவர் கைது

By

Published : Jul 28, 2020, 8:20 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த எரங்காட்டூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பாட்டி மற்றும் தாயுடன் வசித்து வந்தார். இதையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாக தாயார் விவசாயப் பணிக்கு சென்றுவிடும் நிலையில், குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதையறிந்த எதிர் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்கு வந்திருந்த இலங்கை முகாமைச் சேர்ந்த நாகராஜ்(40) என்பவர், குழந்தைக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தை நாகராஜூக்கு எதிராக அளித்த வாக்குமூலத்தின்படி, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பவானிசாகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலில் குதித்த குற்றவாளி!

ABOUT THE AUTHOR

...view details