தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு பெண் பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு: தந்தையை கொன்ற மகன் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈரோடு: திருமணத்திற்கு பெண் பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தையை மகனே கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தையை கொன்ற மகன்
தந்தையை கொன்ற மகன்

By

Published : Mar 9, 2021, 9:47 PM IST

ஈரோடு மாவட்டம் வெள்ளியங்கிரி புதூரைச் சேர்ந்தவர்கள் சங்கர் (52), மாலதி தம்பதி. இவர்களுக்கு தீனதயாளன் (27) என்ற மகன் உள்ளார். இவரின் திருமணத்திற்காக பெற்றோர் பெண் தேடி வந்துள்ளனர்.

ஆனால் இதுவரை தீனதயாளனுக்கு பெண் கிடைக்கவில்லை. நேற்றிரவு (மார்ச் 8) குடிபோதையில் இருந்த அவரது தந்தை மகனிடம் பெண் பார்ப்பதற்கு பணம்தான் செலவாகிறது என்று திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்தரமடைந்த மகன், தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த தந்தை சங்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!

ABOUT THE AUTHOR

...view details