சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம் என்ற கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பூசாரி ரமேஷ் நேற்று காலை வழக்கம்போல் பூஜையை முடித்தபின் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
பின்னர், மாலையில் பூசாரி கோயிலுக்குச் சென்றபோது கோயில் கதவிலிருந்த பூட்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம் இது குறித்து உடனடியாக ஊர்ப்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் சென்று பார்த்தபோது கோயில் கருவறையில் உள்ள அம்மன் சிலையிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம், தங்கத்தாலி திருடுபோயிருந்தது.
இது குறித்து உடனடியாக பவானிசாகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கோயிலில் புகுந்து திருடிய நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என தயிர்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கோயிலின் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத்தாலி திருட்டு