ஈரோடு:சத்தியமங்கலத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “கால சூழ்நிலைகளில் வெட்டுக்கிளி, வேடந்தாங்கல் பறவை, பட்டுப்பூச்சி, பருவ கால சிட்டுக்குகள் ஆகியவற்றை போல பலர் பிரிந்து சென்றாலும், அதிமுகவை அசைக்க முடியாது.