ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை குமாரசாமி தனது விளைநிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் வேலை செய்த இடத்தருகே பாம்பு சீறும் சத்தம் கேட்டு என்னவென்று எட்டிப்பார்த்துள்ளார். அப்போது, நாகப்பாம்பு ஒன்று மற்றொரு பாம்பை வாயில் கவ்வியிருந்ததைக் கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார்.
பசிக்கு பாம்பையே விழுங்கும் நாகம் - பதற வைக்கும் வைரல் வீடியோ - Viral video
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் நாகப்பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதன்பின்னர் நாகப்பாம்பு வாயில் கவ்வியிருந்த பாம்பின் தலையை மெதுவாக விழுங்குவதை தனது செல்போனில் குமாரசாமி வீடியோ எடுத்தார். நாகப்பாம்பு மற்றொரு பாம்பை மெள்ள மெள்ள முழுவதுமாக இரையாக விழுங்கும் காட்சி பார்ப்பவரை பதைபதைக்க வைக்கிறது. இதனை ஐந்து நிமிடங்கள் வரை வீடியோவாக எடுத்த குமாரசாமி வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். தற்போது நாகப்பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் வீடியோ காட்சி காட்டுத்தீபோல் வைரலாகி வருகிறது.
ஒரு பாம்பை மற்றொரு பாம்பு விழுங்குவதை பிறர் சொல்லி கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் அதனை நேரில் பார்க்கும் வாய்ப்புகள் குறைவுதைான். அதனை வீடியோவாக பார்க்கும்பொழுது பலரும் பயத்தில் உறைவது நிச்சயம்.