தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார திருவிழா - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் குறைந்தளவு பக்தர்களுடன் சூரசம்ஹார திருவிழா நடைபெற்றது.

சூரசம்ஹார திருவிழா
சூரசம்ஹார திருவிழா

By

Published : Nov 20, 2020, 2:24 PM IST

பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சூரசம்ஹார திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

முருகனுக்கு பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவின் 6-ம் நாளான இன்று (நவ.20) சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

சூரசம்ஹார திருவிழா

பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் சன்னதி முன்பு எழுந்தருளி சூரனை வதம் செய்தார். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு சூரசம்ஹார திருவிழா பக்தர்கள் கூட்டம் இன்றி நடைபெற்றது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கிய கந்தசஷ்டி விழா!

ABOUT THE AUTHOR

...view details