ஈரோடு: தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று (ஜனவரி 29) நடைபெற்றது. தாளவாடி, ஆசனூர் கேர்மாளம் மற்றும் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் சமூக ஆர்வலர்கள், வனவர், வனக்காவலர்கள் கொண்ட தனிக்குழுவினர் நீர்நிலைகளில் காணப்படும் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 60 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு - latest tamil news
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுக்கும் பணியில் 60 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 தினங்களாக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில், கரும்பச்சை இலைக்கொழி (Jacana), புள்ளி மூக்கு வாத்து (spot billed duck), வெண் கழுத்து நாரை (woolly necked stork), நீல மேனி ஈப் பிடிப்பான் (Verditer fly catcher), கருந்தலை மாங்குயில்( black hooded oriole), சிவப்பு வால் காக்கை (Rufous tree pie), வெண் முதுகு பாரு கழுகு (white rumped vulture ) மற்றும் சாம்பல் நிற வாலாட்டி ( Grey wagtail) உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனத்தில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால், பறவைகள் முகாமிட்டு வாழ்வதாரத்துக்கான சுழலை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
இதையும் படிங்க:கன்னியாகுமரியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்