ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபடுவதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், புதர் மறைவில் பதுங்கிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையடுத்து, பிடிபட்டவர்களிடமிருந்த புள்ளி மான் தலையை கைபற்றிய வனத்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கரோனா ஊரடங்கின் காரணமாக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மானை வேட்டையாடி உண்டதாக கூறியுள்ளனர்.