ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் கிழக்குப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. அந்தியூரில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் நகரப்பகுதிகளுக்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர்.
பர்கூரில் ஒற்றை யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! - பர்கூர் மலைப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்
ஈரோடு: பர்கூர் கிழக்குப்பகுதியில் யானைகள் நடமாடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
elephant
இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி காடுகளில் இருந்து சாலைக்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அந்தியூர் தேவர் மலைப்பகுதியில் ஒற்றை யானை சில நாள்களாக முகாமிட்டுள்ளது.
எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கவனத்துடன் செல்லுமாறும் சாலையில் இருந்து இறங்கி காட்டுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.