சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையோரம் சுற்றித் திரிவதோடு அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திவருகின்றன.
இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோரம் ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் சாலையில் யானை நடமாடுவதைக்கண்டு தனது காரை நிறுத்தியதைத் தொடர்ந்து யானை சாலையோரம் மெதுவாக நடந்துவந்தது.