ஈரோடு: 80’களில் ஆண்களின் கனவுக்கன்னியாக மட்டுமல்லாமல், பல இளம்பெண்களை தன் வசீகரப் பார்வைக்காகவும் ஏங்க வைத்தவர், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பிறந்தநாள் இன்று (டிச.2) அவரது ரசிகர்களால் பல்வேறு இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஈரோடு அகில் மேடு வீதியில், தேநீர்க்கடை நடத்தி வரும் குமார், தீவிர சில்க் ஸ்மிதாவின் ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு ஆண்டும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார். ஆனால், இந்த ஆண்டு சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.