கடந்த 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - Bomb blasting
ஈரோடு: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மௌன ஊர்வலம் சென்றனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி