ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் யானைகள், சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவைகள் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் புகுந்துவருகின்றன. அதில் யானைகள் விவசாயத் தோட்டங்களில் புகுந்த பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. அதன் காரணமாக அவர்கள் தோட்டங்களைச் சுற்றி மின்சார வேலி அமைத்து வந்தனர்.
அந்த மின்சார வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால், அதனை தவிர்க்கும் விதமாக அப்பகுதி விவசாயிகள் சுருள் கம்பி மின்வேலிகளை அமைத்துவருகின்றனர். அதில் அவர்கள், உயர மின்வேலி கம்பங்களில் சுருள் கம்பிகளை தொங்கவிடுகின்றனர்.