தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணைப்பூங்கா சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை

பவானிசாகர் அணைப்பகுதி பூங்காவில் முகாமிட்ட யானை, அங்கிருந்துவெளியேற முயற்சிக்கும்போது, சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது.

By

Published : Oct 14, 2021, 9:47 PM IST

பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியதோடு பூங்காவின் இரும்பினால் ஆன நுழைவுவாயில் கதவையும் சேதப்படுத்தியது.
காட்டுயானை

ஈரோடு: பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி உள்ள பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டு யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணைப் பூங்கா பகுதியில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை பூங்காவிற்கு வந்த ஒற்றை காட்டு யானை பூங்காவிற்குள் முகாமிட்டது.

அங்கு காட்டுயானை பூங்காவில் நடமாடுவதைக் கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர். யானைப் பூங்காவை விட்டு வெளியேற முயற்சித்த போது, பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியதோடு, பூங்காவின் இரும்பினால் ஆன நுழைவுவாயில் கதவையும் சேதப்படுத்தியது.

காயமடைந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை

அப்போது புங்கார் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆனந்தி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் இருவரும் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். காட்டுயானை சாலையில் வருவதைக் கண்ட கர்ப்பிணி ஆனந்தி அச்சமடைந்து பயத்தில் ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்தார்.

சாலையில் நடமாடிய காட்டுயானை பின்னர் அப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் சென்று மறைந்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கீழே விழுந்து காயம் அடைந்த கர்ப்பிணியை மீட்டு, சிகிச்சைக்காக சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் முட்புதருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை - மக்கள் பீதி

ABOUT THE AUTHOR

...view details