தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வியாபாரி கைது - பாலியல் தொந்தரவு

சத்தியமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வியாபாரி கைது
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வியாபாரி கைது

By

Published : Apr 15, 2021, 10:33 PM IST

ஈரோடு: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார்(49). இவர் ஊர் ஊராக தள்ளுவண்டியில் சோப்பு சீப்பு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த புங்கம்பள்ளியில் சோப்பு பவுடர் விற்பதற்கு இன்று (ஏப்ரல் 15) சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள வீட்டில் சோப்பு பவுடர் விற்க சென்றபோது 10 வயது சிறுமி தனியாக இருப்பதை கவனித்தார்.

பின்னர், சிறுமியிடம் சோப்பு கொடுப்பதுபோல நைசாக பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். சிறுமி அழுதுக் கொண்டே நடந்த சம்பவத்தை கூறினார். ஆத்திரமடைந்த கிராமமக்கள் முத்துக்குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து, புன்செய் புளியம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் நடைபெறும் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details