தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானியில் தீப்பிடித்து எறிந்த எள்ளு கோல் படப்பு! - Sesame hay fire at Bhavani in erode

ஈரோடு: பவானியில் எள்ளு கோல் படப்பு தீ பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பவானியில் தீ பிடித்து எறிந்த எள்ளு கோல் படப்பு
பவானியில் தீ பிடித்து எறிந்த எள்ளு கோல் படப்பு

By

Published : Jun 13, 2021, 12:31 PM IST

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள ஜம்பை, சின்ன வடமலை பாளையம் பகுதியில் வசிப்பவர் ரகு. இவர் தனது 25 ஏக்கர் நிலப்பரப்பளவில் எள்ளு பயிரிட்டுள்ளார். எள்ளைப் பிரித்து எடுத்து எள் தண்டுகளை வைத்து தனது நிலத்தில் எள்ளு கோல் படப்பு அமைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜூன்.12) மதியம் அந்த எள்ளு கோல் படப்பு தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பிடித்து எறிந்த எள்ளு கோல் படப்பு!
இதனைத் தொடர்ந்து, பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனையடுத்த தீயணைப்புத் துறை விசாரணையில் அவ்வழியாகச் சென்ற வழிப்போக்கர் பீடி குடித்துப் போட்டதினால் தீ பிடித்து எறிந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details