தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீரியல் நடிகையை திருமணம் செய்வதாக மோசடி: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை - தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

தொலைக்காட்சி சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு, நகை பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீரியல் நடிகையை திருமணம் செய்வதாக மோசடி
சீரியல் நடிகையை திருமணம் செய்வதாக மோசடி

By

Published : Dec 6, 2022, 12:12 PM IST

ஈரோடு: இளம் பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் மூலம், ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்த தனியார் ஈவென்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்த நிலையில், நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை ராகுல் அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகையிடம் இருந்து நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் திரும்ப தருவதாக கூறி ராகுல் பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு முதல் நடிகையை காதலித்த ராகுல் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன் நகை பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். மேலும் வேறு பெண்ணை திருமணம் செய்யவும் முயற்சித்துள்ளார்.

சீரியல் நடிகையை திருமணம் செய்வதாக மோசடி

இதனால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன் தன்னை ஏமாற்றியதாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.

அதன் பேரில் ராகுல் மீது இரண்டு பிரிவுகளில் (ஐபிசி 376, 406) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம், ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க: ஈரோட்டில் நூதன முறையில் லாட்டரி விற்பனை.. இருவர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details