கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.ஏ. செங்கோட்டையன் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது, "திரை உலகமும், இந்தியாவும் வியக்கத்தக்க வகையில் எஸ்.பி.பி. 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை அந்தந்த மொழி உணர்வுக்கேற்ப பாடல்களைப் பாடி மறைந்துள்ளார் அவரின் மறைவு, திரைவுலகிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பேரிழப்பு.
எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் - sbp senkottaiyan
ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்தார்.
எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன்
மதுரையில், நடைபெற்ற வீரவணக்க நாளில் அவரது பாடல் பாடப்பட்டது. ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் தங்கத்தாரகையே வருக என்ற எஸ்.பி.பி.யின் பாடல் பாடப்பட்டது. இந்தியாவில் அரசியல் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அவரது பாடல் பாடப்பட்டது வரலாறு. எஸ்.பி.பி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் இசையுலகில் என்றும் நிலைத்திருப்பார்" என்றார்.
இதையும் படிங்க:சாகாவரம் பெற்ற பாடல்களை பாடியவர் எஸ்பிபி - செல்லூர் ராஜூ இரங்கல்