செங்கோட்டையன் கைகட்டி நிற்கலாமா... கரிசனம் காட்டும் தமிழன் பிரசன்னா... ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் நகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கு அருகில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா மற்றும் அந்தியூர் எம்எல்ஏ, ஏ.ஜி வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசன்னா, எங்கள் இயக்கத்தின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போடாத குத்தாட்டத்தையா எங்கள் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டுவிட்டு வந்தார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர் வயதுக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அளவிற்கு பேசினால் அது மரியாதை. பிரசன்னாவின் பேச்சுக்கு நான் ரசிகன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் சேர்த்து அவரை முதலமைச்சராக ஆக்கிவிட்டு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓரமாய் கை கட்டி நிற்கிறார். இந்த அவமானத்திற்கு நாளையே உண்ணாவிரதம் இருந்து செங்கோட்டையன் அவரது தலைமையில் அதிமுகவை மீட்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்.. மண்ணை எடுக்க முண்டியடித்த பக்தர்கள்..