தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் அதிமுகவை அசைக்க முடியாது' - அமைச்சர் செங்கோட்டையன் - admk it wing meeting

ஈரோடு: தமிழ்நாட்டில் அதிமுகவை அசைக்கமுடியாது என்றும் 20 ஆண்டுகளில் அடையவேண்டிய வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தமிழ்நாடு எட்டியுள்ளது என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

admk it wing meeting
அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

By

Published : Sep 13, 2020, 7:09 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பேரவை சிறப்புடன் செயல்பட்டது. அதுபோலவே அதிமுக வின் ஐடி பிரிவுகளும் உள்ளன. இளைஞர்கள் தான் மக்கள் மத்தியில் அரசின் திட்டங்களை எளிமையாக விளக்கி கட்சியை வளர்க்க முடியும். அதிமுகவை எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் அசைக்க முடியாது. சிலர் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண்கின்றனர். அது வெறும் பகல் கனவு தான்.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மழை பெய்து அணைகள் நிரம்புகின்றன. இது நல்ல ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. ஜெயலலிதாவின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. 20 ஆண்டு கால வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

ABOUT THE AUTHOR

...view details