ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிரிக்கெட் அகாதமி கிரிக்கெட் மைதானத்தில், தனியார் கிரிக்கெட் அகாதமியுடன் இணைந்து பூஸ்ட் தனியார் கம்பெனி கிரிக்கெட் வீரர்களுகான தேர்வு முகாமை நடத்தினர். இதில் மாவட்ட அளவிலான 11, 14 வயதிற்குள்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும், பயிற்சியுமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் சுற்றுப் பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்றனர். மேலும் இம்முகாமில் தேர்வாகும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட்டில் பங்கேற்க அனைத்து நிதியுதவியையும் தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது.