தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல் - Erode Pannari

ஈரோடு: கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 185 மதுபாட்டில்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டு பெண் உள்பட 2 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்
பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Jun 14, 2021, 2:21 AM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவில்லை. இதனால் கர்நாடகத்திலிருந்து காய்கறி வாகனங்கள் மூலம் மதுபானங்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து சத்தியமங்கலம் காவல் துறையினர் கோட்டுவீராம்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

16 கர்நாடக மது பாக்கெட்டுகள்

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சிவப்பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்துபோது அவரிடமிருந்து 16 கர்நாடக மது பாட்டில்கள் கடத்துவது தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின்பேரில் காய்கறி வியாபாரி நந்தினி பிக் அப் வேனில் மதுபாட்டில்கள் கடத்துவதாக தெரிவித்தார்.

105 மது பாட்டில்கள்

இதையடுத்து கர்நாடகவிலிருந்து பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்த சந்தேகப்படும்படியான பிக் அப் வேனை சோதனையிட்டபோது 105 பாட்டில்கள் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவலர்கள் இருவரையும் கைதுசெய்தனர். இதையடுத்து பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனைச்சாவடியில் தீவிர வாகனச்சோதனை நடத்தப்பட்டது.

80 கர்நாடக மதுபாட்டில்கள்

அதேபோல, புன்செய் புளியம்பட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 80 கர்நாடக மதுபாட்டில்களை புன்செய்புளியம்பட்டி காவல் துறையினர் கைபற்றி, அதே பகுதிதியைச் சேர்ந்த மோகன்ராஜை கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details