தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதை வெங்காயம் விலை உயர்வு - ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு: வாரச்சந்தையில் வரத்து குறைவால் விதை வெங்காயம் விலை உயர்ந்து விற்பனையானது.

விதை வெங்காயம் விலை உயர்வு
விதை வெங்காயம் விலை உயர்வு

By

Published : Feb 12, 2021, 9:23 AM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது.

இந்த வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம், விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

நேற்று (பிப். 11) புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தைக்கு 600-க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்தனர்.

கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற விதை வெங்காயம், கிலோ 170 ரூபாய்க்கு விற்பனையானது. எதிர்பார்த்த வரத்து இல்லாததால் விதை வெங்காயம் விலை தினமும் அதிகரித்துவருகிறது.

கடந்த வாரம் சந்தைக்கு 1,200 மூட்டை விதை வெங்காயம் விற்பனைக்கு வந்தது. இந்த வாரம் வரத்து 600 மூட்டையாக குறைந்துவிட்டது. விதை வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம் குறைவான விலைக்கு விற்பனையானது.

இதையும் படிங்க: சின்ன வெங்காய திருட்டை கண்காணிக்க சிசிடிவி பொருத்திய வியாபாரிகள்

ABOUT THE AUTHOR

...view details