ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் அரசு உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு போதுமான குடிநீர், சாமியானா பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு செலுத்த சக்கர நாற்காலி வசதி கூட இல்லை என கூறி எஸ்டிபிஐ கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குப்பதிவினை காலதாமதம் செய்யாமல், வாக்காளர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.