தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 விழுக்காடு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (பிப்.8) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

sengottaiyan
sengottaiyan

By

Published : Feb 7, 2021, 5:20 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அதிமுக அலுவலகத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் செய்ய முடியாது. 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (பிப்.8) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.

மீதமுள்ள வகுப்புகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தனியார் பள்ளிகளில் 100 விழுக்காடு கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை தனியார் பள்ளிகள் நிபந்தனை விதிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சசிகலா என்ட்ரி: சென்னையில் வரவேற்புக்கு ஏற்பாடு

ABOUT THE AUTHOR

...view details