தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா பிரச்னை முடிவுக்குப்பின் பள்ளிகள் திறப்பு' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - கரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின் பள்ளிகள் திறப்பு

ஈரோடு: கரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

sengottaiyan
sengottaiyan

By

Published : May 8, 2020, 5:06 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூர் சாவக்கட்டு பாளையத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில், கைத்தறி நெசவாளர்கள் 450 பேருக்கு கரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் மற்றும் தலா 1000 ரூபாயை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, கைத்தறி நெவாளர்கள் உற்பத்தி செய்த புதிய இரக பட்டு சேலைகளைப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "கரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை திறக்க வாய்ப்பில்லை. கரோனா தீர்வுக்குப் பின்னர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். கணித ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் தனியார் நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

நாளை மறுதினம் சி.ஏ. என்று சொல்லப்படுகிற பட்டயக்கணக்காளர்கள் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆணைப்படி தேர்வு உறுதியாக நடைபெறும்" என்றார்.

இதையும் படிங்க:விபத்திற்குள்ளான இந்திய விமானப்படை விமானம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details