ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் நம்பூயூரில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்படுகிறது. பள்ளிகளை பொறுத்தவரையில் மாநிலம் முழுவதும் உள்ள சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த பிரச்னையை ஆசிரியர்கள் தீர்த்துக் கொள்ள பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிகள் விடுமுறை என்பது வதந்தி - அமைச்சர் செங்கோட்டையன் - minister senkottaiyan
ஈரோடு: தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிக்கள் விடுமுறை விடப்படுவதாக வெளியாகும் செய்தி தவறானவை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3565751
அதேபோல் தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிகள் விடுமுறை விடப்படுவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. மாணவர்கள் யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம். மேலும் கடுமையான தண்ணீர் பிரச்னை இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து எங்கள் கவனத்திற்கு வரும்பட்சத்தில் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். 2017 - 2018 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கனிணிகள் வழங்கப்படும் என்றார்.