ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இணைந்து மூன்று நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடத்தவுள்ளது.
இந்த விண்வெளி கண்காட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.