ஈரோடு மாவட்டம் மஜீத் வீதியில் தராசு மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை 2017ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
16 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்வதவருக்கு 20 ஆண்டுகள் சிறை - ஈரோடு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு
ஈரோட்டில் 16 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தராசு கடை உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறைகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தராசு கடை உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று(அக்.15) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் நீதிபதி மாலதி குற்றவாளிக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:சடன் பிரேக் அடித்த ஓட்டுநர்... தூக்கி வீசப்பட்ட தாய் மற்றும் கை குழந்தை... பதறவைக்கும் சிசிடிவி காட்சி