கேரளாவில் யானைகளுக்கு தீவனமாக அனுப்பப்படும் மக்காச் சோளத் தட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
மழைநீரை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்படும் சோளப்பயிர் மூன்று மாதத்தில் அறுவடை செய்யப்படும். மழைநீரால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் சென்னை உள்பட கேரளா மாட்டுத் தீவன தட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் பகுதியில் சாகுபடி செய்த மக்காச்சோளத் தட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் விலை பேசப்பட்டு மக்காச்சோளத் தட்டுகள் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.
இதற்காக பயிற்சி பெற்ற தட்டு அறுக்கும் பணியாளர்கள் தட்டுகளை அறுத்து தோட்டங்களில் இருந்து சுமந்து லாரியில் ஏற்றுகின்றனர்.