சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் தலமலை, சிக்கள்ளி, தொட்டபுரம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஓடை பள்ளங்களில் இருந்து வெள்ளநீர் ஒன்றாக கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்ததால், சிக்கள்ளி பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காட்டாற்று வெள்ளநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால் தலமலை, தாளவாடி இடையே 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் மரம் செடி கொடிகள் அடித்துச் செல்லப்பட்டன.
ஈரோடு அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம்! - sathymangalam flood transport stop
ஈரோடு : தலமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். காய்கறி வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தண்ணீர் வடியும் வரை காத்திருந்தன. தலமலை வனப்பகுதியில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ளநீர் சூழ்ந்த தரைப்பாலத்தை மக்கள் கடக்க வேண்டாம் என்றும் வடியும் வரை காத்திருக்குமாறும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பலத்த மழையால் வனக்குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளதால் யானைகள் வனத்தில் இருந்து கிராமப்புறங்களில் புகுவது குறையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
சத்தியமங்கலத்தில் மழை வேண்டி மகா யாகம்!