ஈரோடு:தமிழ்நாடு- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையைத் தடை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது, அரசின் கவனத்தை ஈர்க்க திம்பம் மலைப்பாதையில் பிப். 10ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தமிழ்நாடு- கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுப் போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.
இது தொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரவு நேரப் போக்குவரத்து தடைக்குத் தாளவாடி, ஆசனூர் பகுதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புதன்கிழமை (பிப்.2) தாளவாடியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்னாள் பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார்.
வன விலங்கு பாதுகாப்பை மட்டும் பார்க்கக் கூடாது!