தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிலேயே பிரசவம்- பெண்ணின் குழந்தைக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சை - light weight child in dangerous condition

வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணின் ஆண் குழந்தைகக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

By

Published : Feb 4, 2022, 3:04 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையத்தில் தனியார் மில்லில் வடமாநிலத்தைச் சேர்ந்த கமருதீன் நசீமா பேகம் தம்பதி பணியாற்றி வருகின்றனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நசீமா பேகத்துக்குப் பிரசவவலி ஏற்பட்டு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை குறைந்த எடையுடன் பிறந்த ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சல்மான்கான் மருத்துவ உதவியாளர் பரத் ஆகியோர் குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தாயும் குழந்தையும் பத்திரமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். உரிய நேரத்தில் குழந்தையை மீட்டுக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:குழந்தையைக் கரடியிடம் தூக்கி வீசிய தாய் - வைரல் காணொலி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details