தனியார் பள்ளியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசுகையில், ஓட்டுநர் உரிமமின்றி இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்கள் சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டவிதிகளை மாணவர்களிடம் எடுத்து சொல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இல்லை - சார்பு நீதிபதி வருத்தம் - awarness
ஈரோடு: பள்ளிகளில் தற்போது நீதி போதனை இல்லை என சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்.
தற்போது பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இல்லை - சார்பு நீதிபதி வருத்தம்
கரு உருவாவது முதல் கல்லரை வரை சட்டத்தின்படி செயல்பட வேண்டும். படிப்பறிவு இல்லை என தவறு செய்தாலும் அது தவறுதான், அதனால் பாமரரும் பள்ளி மாணவர்களும் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் நீதிபோதனை என்ற வகுப்பு நடத்தப்பட்டது. அதில் நல்லொழுக்கும் கற்பிக்கப்பட்டது. தற்போது அது போன்ற வகுப்புகள் இல்லாததால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது என்றார்.