தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் உள்ளது. பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் பயணிகள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து தமிழ்நாடு, கர்நாடக அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். கோவை, ஈரோடு, சேலம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள், நகர் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
பேருந்து நிலையத்திற்குள் இரு சக்கர வாகனங்களுக்குத் தடை! - sathyamangalam
ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து போக்குவரத்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

police investigation
இந்நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்து நிற்கும் இடங்களில் நிறுத்துவதனால் பேருந்துகள் நிற்க இடமில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனிடையே, போக்குவரத்து காவல்துறையினர் நேற்றிரவு பேருந்து நிலையத்துக்கு வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.