தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: சத்தியமங்கலம் வட்டத்தில் அதிமுக முன்னணி - local body election results

ஈரோடு: வாக்கு எண்ணிக்கையில் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

sathyamangalam
sathyamangalam

By

Published : Jan 2, 2020, 5:01 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் பவானிசாகர் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது.

15 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலான வார்டுகளில், அதிமுக வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும், அதிமுக முன்னிலை பெற்றது. சத்தியமங்கலம் யூனியன் பொறுத்தவரை முதல் வெற்றியாக ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த சரோஜா என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.

வாக்கு எண்ணும் பணி மும்முரம்

இதேபோல பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கர் ஊராட்சி தலைவர் பதவியையும், முதல் இரண்டு வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

ABOUT THE AUTHOR

...view details