தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ மிதித்தபோது தவறி விழுந்தவருக்கு ரூ.62 ஆயிரம் இழப்பீடு - கோயில் நிர்வாகத்தின் பலே நடவடிக்கையால் பயன்! - சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயில்

ஈரோடு : பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதித்தபோது தவறி விழுந்து தீக்காயம்பட்ட பெண்ணுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால் இழப்பீட்டுத் தொகை ரூ.62 ஆயிரம் வழங்கப்பட்டது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/25-September-2019/4545576_941_4545576_1569386211527.png

By

Published : Sep 25, 2019, 11:52 AM IST

சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற குண்டம் திருவிழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரோஜா(60) என்ற பெண் தீ மிதித்தபோது குண்டத்தில் தவறி விழுந்ததில் கை, காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால், தீக்காயம் அடைந்தவருக்கு இழப்பீட்டுத்தொகை ரூ.62 ஆயிரம் வழங்கப்பட்டது

ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும். இந்நிலையில் குண்டத்தில் தவறி விழுந்து காயம்பட்ட சரோஜாவிற்கு, இன்சூரன்ஸ் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.62 ஆயிரத்து 155 க்கான உத்தரவு பண்ணாரிஅம்மன் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சபர்மதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.37.41 லட்சம் காணிக்கை வசூல்!

ABOUT THE AUTHOR

...view details