சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை தடுக்க லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்தி வனவிலங்குகள் நடமாடுவதை அறிவதற்காக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள் குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தினர்.