தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாய்ந்துவிழும் நிலையில் மின்கம்பங்கள் - அச்சத்தில் பொதுமக்கள் - தெங்குமரஹாடா கிராமத்தில் விழும் நிலையில் மின்கம்பம்

ஈரோடு: தெங்குமரஹாடா வனக்கிராமத்தில் சாய்ந்துவிழும் நிலையில் உள்ள மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

erode
erode

By

Published : Jan 19, 2020, 10:36 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கிராமத்திற்கு செல்லவேண்டுமெனில் மாயாற்றை கடக்க வேண்டும்.

போதிய அடிப்படை வசதியில்லாத இக்கிராமத்தில், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்துவிழும் நிலையில் உள்ளன. சூறைக்காற்று பலமாக வீசும்போது மின்கம்பங்கள் சாய்ந்துவிடுகின்றன. நாளடைவில் மேலும் சாய்ந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளன.

சாய்ந்துவிழும் நிலையிலுள்ள மின்கம்பம்

குறிப்பாக, தெங்குமரஹாடா ஒன்றாவது வார்டு புதுக்காடு செல்லும் வழியில் யானைகள் அதிக நடமாட்டம் உள்ள சாலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்துவிழும் நிலையில் உள்ளது. கைகளால் தொடும் தூரத்தில் தாழ்வாக மின்கம்பி உள்ளதால் அவ்வழியே செல்லும் யானைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் இதனால் அச்சமடைந்துள்ளனர். விபத்து நிகழும் முன் மின்கம்பங்களைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிமெண்ட் இல்லாத மின் கம்பம்: அச்சத்தில் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details